BREAKING NEWS: தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு

 BREAKING NEWS: தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11.09.2021-ன்படி 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று (28-9-2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் அடிப்படையில், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும். நோய்த் தொற்று பரவலைக் சுண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், அரசு ஆணை எண்.552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 11:09.20)21ன்படி, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31.10.2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு

உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்,

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

click here to download full press release

Previous Post Next Post