*🅱️🅱️🅱️BREAKING NEWS: தமிழகத்தில் இன்று (10.08.2021)கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரங்கள்*
சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 363 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 284 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,930 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400ஆக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.