தமிழக நிதியமைச்சர் இன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதில் பள்ளிக்கல்வித்துறைக்கு 32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க மாதிரி பள்ளிகள் அமைக்க சிறப்பு திட்டம்.
நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
865 உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 20. 70 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.
அடிப்படை கல்வி அறிவு கணித அறிவை உறுதி செய்ய 66.70 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம்.
25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் உருவாக்கப்படும்.