பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்புகள் 26.8.2021
2021-22 ஆம் நிதியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
இந்த கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.
2020-21ம் கல்வி ஆண்டில் 26 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன; 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 36 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 46 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புது பொலிவுடன் கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகள் சரி செய்யப்படும்
குளிர்சாதன வசதி, இதர மின்சார வசதிகள் புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும்
மின்னூலகம் உருவாக்கப்பட்டு உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்
எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வாக இருந்தாலும் சரி, இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, அரசு முன்வைக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் - சட்டமன்றத்தில் செங்கோட்டையன் பேச்சு
#பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்
- பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு
#ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதி முதல் 22 ஆம் வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பு