கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய(21.07.21) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை

 கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய(21.07.21) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை


சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,875பேரும், வெளிநாட்டை சேர்ந்த 5 பேர் மற்றும் பிற மாநிலத்தவர்கள் 11 பேர்களையும் சேர்த்து 1,891பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27பேர் உயிரிழந்து உள்ளனர். 2,423 பேர் குணமடைந்து உள்ளனர்.


தமிழகத்தில் கடந்த 56 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 70 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 41,248 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,891 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,41,168 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,59,68,166 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.



இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,090 பேர் ஆண்கள், 801 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,84,799 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,56,331 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,423பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,81,201 ஆக உயர்ந்துள்ளது.



27 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,10பேர் தனியார் மருத்துவமனையிலும், 17 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக எண்ணிக்கை




by...

vinayaga coaching academy 

Previous Post Next Post