திருமணத்திற்கு e-Pass இந்த மாவட்டங்களுங்கு மட்டும்..??
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருமணத்திற்கு e-Pass பெறுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் corona இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை June 28 வரை நீடித்துள்ள தமிழக அரசு அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அதன்படி திருமணத்திற்குe-Pass பெறுதல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் திருமணத்திற்காக அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையே e-Pass பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் ஆட்சியரிடம் இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.