#BREAKING | தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு l 23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி l தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு -press release
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - '
தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி -
வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு!!!
23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி,
அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு
23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
சாலையோர உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி!
23 மாவட்டங்களில் திருமண இ பதிவு தேவையில்லை
தொற்று குறைந்த மாவட்டங்களிடையே திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்ல இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம்; திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி; வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதி!
11 மாவட்டங்களில் சலூன் கடைகளுக்கு அனுமதி -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் தாக்கம் குறைய குறைய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
வருகிற திங்கட்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.
by...
vinayaga coaching academy