பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அனுமதி !!
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் சில மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதித்தால் அடுத்தடுத்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தளர்வுகளுடன் பொது ஊரடங்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
எனினும் பள்ளிகள் திறக்கப்படும் முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது