தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா முற்றிலும் குறைந்த பிறகு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு வீட்டிலுள்ள பெற்றோருக்கும் அவர்களது குழந்தைகள் முக்கியம்.
முதலில் உயிர் தான் முக்கியம் பின்தான் கல்வி எனவே தமிழகத்தில் கொரோனா முற்றிலும் குறைந்த பிறகு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.